பண்டார நாயக்க விமானநிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சுங்க பிரிவு தெரிவித்தது.

கொழும்பைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 39 இலட்சத்து 65 ஆயிரத்து 530 ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டன.

சந்தேக நபர் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்டுள்ளதாக தெரிவித்த சுங்க பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.