ஆளுந்தரப்பில் மட்டுமல்லாது எதிர்க்கட்சி, ஏனைய கட்சிகிளலுள்ளவர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பொறுப்பை நிறைவேற்றவில்லை என, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவானது பக்கச்சார்பற்ற, வெளிப்படையான, சுயாதீனமாகதhfj; தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தலை நடத்துவதற்கு முன்னர், ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், உண்மையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும், இதற்காக சகல அதிகாரங்களுடனான சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கையை நிறைவேற்றாத ஜனாதிபதி வேட்பாளர்கள், எதிர்க்கட்சிகள், வேறு எந்த கட்சி உறுப்பினர்களையோ சந்திக்க தான் தயாராகவில்லை என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்