கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து அமைச்சினால் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட 44 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்று காலை மணிக்கு கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலக மாநாட்டு மண்;டபத்தில் கரைச்சிப்பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் அமைச்சின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு உதவித் திட்டங்களை வழங்கி வைத்தனர்.
வடக்கு மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியுடன் தலா ஜம்பதாயிரம் ரூபா பெறுமதியான உதவிகள் 44 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.