தேர்தலை நடத்துமாறு பெப்ரல் அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

301 0

டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு  முன்னர் தேர்தலை நடத்தி, ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யுமாறு கோரி, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு, பெப்ரல் அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளும், மக்கள் பிரதிநிதிகளின்றி, ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாக தெரிவித்துள்ள அவ்வமைப்பு, ஊவா மாகாண சபையின் பதவிக்காலமும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக, எல்லை நிர்ணய பணிகளை பூர்த்திச் செய்வதில் அரசாங்கம் தவறியுள்ளதாக, பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்  என்பவற்றை ஒரே தினத்தில் நடத்தும் கையில், தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு, பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால், தேர்தல் செலவீனத்தை குறைக்க முடியும் என, அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.