எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்!

294 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகாரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் . தேர்தலுக்கு முன்னர் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம் என  பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

 

அவ்வாறு செயற்படாத பட்சத்தில் தேர்தலில் போட்டியிடும் எந்த கட்சி சார்ந்த வேட்பாளரையும் தான் சந்திக்க போதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்புகள் பொறுப்புக்கூற தவறியுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.