ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கோ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கோ நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு வேலைத்திட்டமோ, தேவையோ காணப்படாதுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
அக்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் கூறினார்.
தேசிய மக்கள் சக்தி எனும் தொனிப் பொருளில் தமது கட்சியினால் அமைக்கப்படவுள்ள முன்னணியின் முதலாவது பொதுக் கூட்டம் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதாகவும், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் நாட்டுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.