தமிழ் மக்கள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை சி.வி.யே தடுத்தார் – கஜேந்திரகுமார்

319 0

தமிழ் மக்கள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்தான் தடுத்தார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் நேற்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “கொள்கையுடன் இணையும் தரப்பினர் ஒன்றுசேர வேண்டுமென்பதற்காக வடக்கின் முன்னாள் முதலமைச்சருடன் நாம் ஒன்றுசேர வேண்டுமென மக்கள் எண்ணுகின்றனர்.

அவ்வாறான நிலையில், கொள்கையற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். ஐயும் இணைப்போம் என சி.வி.விக்னேஸ்வரன் கூறுவது, நிபந்தனையாகும். அந்த நிபந்தனையை நாம் ஏற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த சந்திப்பை அவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

நிபந்தனையை முன்வைப்பது வடக்கின் முன்னாள் முதல்வரே. எனவே கொள்கையை நிபந்தனையாக செயற்படுத்த முடியாது” என மேலும் தெரிவித்தார்.