பனாமா பத்திரம், ஊழல் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பனாமா நாட்டில் போலியான நிறுவனங்கள் தொடங்கி உலகளாவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த ஊழல் விடயத்தில் உலக நாடுகளின் பல தலைவர்கள் உட்பட சர்வதேசத்தின் பல பிரபலங்களின் பெயர்கள் வெளியிடபட்டன.
இதன்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பும் மோசடிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து பாகிஸ்தானின் எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், ”பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பும் அவரது குடும்பத்தினரும் பல கோடி ரூபாயை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவாஷ் ஷரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினரை நீமன்றத்தில் முன்னிலையாகுமாறு பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.