கொழும்பு துறைமுகத்திலிருந்து இதுவரை அகற்றப்படாத 111 கொள்கலன்களை மறு ஏற்றுமதி மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அதன்படி கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள குப்பைக் கொள்கலன்களை இடமாற்றம் செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த குப்பை கொள்கலன்கள் தொடர்பான ரீட் மனு, நீதியரசர்களான யசந்த கொடகொட, மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.