சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

255 0
முல்லைத்தீவு, குருகண்த மற்றும் கோகிலாய் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 நபர்களை கடற்படையினர் நேற்று (30) கைது செய்தனர்.

கிழக்கு கடற்படை  குருகண்த மற்றும் கோகிலாய் கடல் பகுதிகளில் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, இந்த சந்தேக நபர்கள் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுடன் 2 டிங்கிகள், 2 வெளிப்புற மோட்டார்கள், 540 அடி அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை மற்றும் 255 கிலோ சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்கள் 29, 41 மற்றும் 47 வயதுடைய புல்முடை மற்றும் கோகிலாய் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கிகள், வெளிப்புற மோட்டார்கள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்களுடன் முல்லைத்தீவிலுள்ள உள்ள மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தரப்பு தெரிவிக்கின்றது.