முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை 5.20 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்ட பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிர் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.