சிரியாவின் முக்கிய நகரான அலப்போவின் கிழக்கு பகுதியில் சிரியாவின் அரசு படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களால் பாரிய அளவில் குற்றங்கள் இழைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்தில் இடம்பெற்ற சிறப்பு கூட்டம் ஒன்றில் மனித உரிமை ஆணையாளர் செய்ட் ராட் செய்ட் அல் ஹூசைன் இதனை தெரிவி;த்துள்ளார்.
இதன்போது கிழக்கு அலப்போவில் இடம்பெற்றுவரும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு மனித உரிமை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அலப்போவில் ரஷ்யா தலைமையிலான கூட்டுப்படைகளால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களால் அந்த பகுதியில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அலப்போ பகுதிகளில் மக்களுக்கு அவசியமான நிவாரண வசதிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.