வடக்கில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை அமைக்க உயர்மட்ட நிதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வடக்கு ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி வங்கியை நிறுவுவதற்கான விவாதங்களில் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியும் ஈடுபட்டுள்ளார் என்றும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கி நிறுவப்பட உள்ளது.
இந்த திட்டத்தினால் சுமார் 1.3 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வடக்கு ஆளுநர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.