வவுனியா – சிதம்பரபுரம் கற்குளம் முதலாம் யுனிட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாதவேளை பிள்ளைகள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் தெய்வாதீனமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்பவில்லை.
இருப்பினும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளமையினால் குறித்த குடும்பத்தினர் வசிப்பதற்கும் இடமின்றி நிர்கதியான நிலைக்கு ஆக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிஸார் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.