2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் லஹிரு வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட லஹிரு வீரசேகர,
நூற்றிற்கு 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்குவதாகவே கடந்த குழப்பகரமான அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது.
இரண்டு பக்கங்களில் இருந்தவர்கள் அவ்வாறு வாக்குறுதியளித்துதான் ஒன்று சேர்ந்தார்கள். எனினும் இந்த நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நன்கு அவதானிக்க வேண்டும்.
இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கசக்கும் மருந்தை கட்டாயமாக பருக வேண்டிய நிலையேற்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் தொடர்பில் ஆற்றிய உரையில் மாத்திரமல்ல பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தார்.
ஆகவே இந்த வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக கசக்கும் மருந்தை மக்களுக்கு கட்டாயமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்ட ரீதியான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்துள்ளது.
வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது அதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் சந்தர்ப்பத்தில் தகவல் அறியும் சட்டம் செயற்படும் விதத்தை எம்மால் அவதானிக்க முடியும்.
சுகாதாரம், கல்வி மற்றும் உயர்கல்விக்கு நிதி ஒதுக்கீடு ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை. இதனை விடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதென்பது இயலாத காரியம். நிச்சியமாக நாளைய தினம் ரணில் அவர்கள் நாட்டு மக்களுக்கு தான் ஒரு சண்டியர் என காட்ட முயல்வார் இது நிச்சயம் நடக்கும்.
நாட்டின் மிகவும் அத்தியவசியமான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு போதாது. பாதுகாப்பு அமைச்சிக்கா நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் விமானக் கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
பிரச்சினை இல்லையென்று இவர்கள் கூறினால் இல்லையென்று புள்ளிவிபரங்கள் ஊடாக நிரூபிக்க நாம் தயார் என்று மேலும் தெரிவித்தார்.