நீதியுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு அச்சநிலை-விக்ரமபாகு கருணாரட்ண

365 0

wikramapaku-karunaradnaநாட்டின் நீதித்துறையில் குற்றங்களைக் கண்டறிந்து அதனை நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அச்ச நிலை தோன்றியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட விக்ரமபாகு கருணாரட்ண,
இவ்வாறான ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுமென நினைக்கவில்லை. இந்த அரசாங்கத்தின் கீழ் அனைத்து குற்றங்களும் வெளிவந்து குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமெனவே நாங்கள் நம்பினோம்.

எனினும் எக்னெலிகொட, தாஜுடீன், லசந்த, ரவிராஜ் உள்ளிட்டவர்களுக்கு நடந்த கொடுமைகள் தொடர்பில் நாங்கள் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும். கடந்த வாரம் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குற்றங்களை கண்டறிந்து அதனை நீதிமன்றுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அச்சம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கோட்டாபய தொடர்பில் நாம் விசாரணை செய்ய வேண்டாமென நான் கூறவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் உரையில் கோட்டாபய பற்றியே பேசியிருந்தார். மேலும் கோட்டாபயவை விடவும் பாரதூரமான விடயங்கள் இருக்கின்றன ஏன் விசாரணை செய்யவில்லை என பலர் கேட்கின்றனர். இத தொடர்பில் அழுவதாக சிரிப்பதா என தெரியவில்லை.

இந்த நாட்டு மக்களை அச்சத்திற்குள்ளாக்கிய, பல கொலைகளுக்கு காரணமாக இருந்த, அதேபோல் எமது மிகப்பெரிய கொல்லை நடவடிக்கைக்கு எமது இராணுவத்தை அனுப்பிய கோட்டாபய பற்றி விசாரணை செய்வதைவிடவும் மிகப்பெரிய காரியம் எதுவென்று தெரியவில்லை. அவர் தொடர்பில் விசாரணை செய்து சம்பவங்களுடன் அவருக்கு என்ன தொடர்பு என்பதை கண்டுபிடிக்க வேண்டுமென்பதே எமது ஆரம்ப மற்றும் தற்போதைய நிலைப்பாடு, எனினும் இந்த அரசாங்கம் மீது தற்போது நம்பிக்கையற்ற தன்மையே ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.