யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் – அரசியலுக்கு தீபா ‘திடீர்’ முழுக்கு

461 0

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா புதிய கட்சி தொடங்கினார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்று கட்சிக்கு பெயரிட்ட அவர் தி.நகரில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலமாக மாற்றினார்.

இந்நிலையில் தீபா அரசியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் நீண்ட விளக்கத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தீபா கூறியிருப்பதாவது:-

ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள். பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.

எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. என்னை விட்டு விடுங்கள். நான் சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு தான் ஆசைப்பட்டேன். எனக்கு பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன்.  யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்,  எனக்கு அரசியல் வேண்டாம். என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டாம். மீறி அழைத்தால் போலீசில் புகார் செய்வேன். எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்.
தீபா-மாதவன்

என் அம்மா இறந்த பிறகு என் அம்மாவின் இடத்துக்கே வந்து ஒரு தாய் போல் ஒரு குழந்தை போல் என்னை பாத்துக்கொண்டார் மாதவன். இப்படி இருந்த எங்களையும் ஒரு கை பார்த்துவிட்டு பிரித்து விட்டு வேடிக்கை பார்த்தது அரசியல் தான். அதன் சூழ்ச்சிகள் தான். என் கேரியர்போய்விட்டது. எனக்கு ஆதி முதல் இன்று வரை அரசியல் பிடிக்கவில்லை. தேவையும் இல்லை என தெரிவித்துள்ளார்.