ஜனாதிபதியால் திருப்புமுனை அடையும் முக்கிய வழக்கு!

336 0

president-maithriஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

81 மாதகாலமாக தீர்வுக்காக போராடுகின்றோம் ஆனால் தற்போது ஜனாதிபதி அண்மையில் இராணுவ தளபதிகள் பற்றி கூறிய கருத்தைஅடிப்படையாக கொண்டு எக்னலிகொட வழக்கு திசை திருப்பப்படுகின்றது.

மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் இழைக்கப்படும் குற்றம் நாட்டுக்கே இழைக்கபடும் குற்றமாகும் இவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நியதி.

ஆனால் எக்னலிகொடவின் விடயத்தில் அரசாங்கம் பக்கசார்பாக நடந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எக்னலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்கு சான்றுகள் இல்லை, இது தொடர்பில் எந்தவித வழக்குகளும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ‘கொட்டி சந்தியா” (புலி சந்தியா) என்ற பெயர் எனக்கு வந்திருப்பது மிகுந்த வேதனை தருகின்றது எனவும் சந்தியா எக்னலிகொட தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.