எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இரண்டு மாற்றுவழிகள் மாத்திரமே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடுவலை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும் அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும் எனவும் கட்சியின் தலைவர்கள் அவ்வாறு இணையாவிடினும் கீழ்மட்ட உறுப்பினர்கள் தற்போது இணைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற்று மக்கள் விருப்பத்துடன் நாட்டின் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.