ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி நிச்சயமாக மஹிந்த அணியை வீழ்த்தும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய அணியொன்று கைகோர்க்கும் என்றும் கூறினார்.
பிரதான இரண்டு கட்சிகளும் அடுத்த மாதம் தமது கூட்டணிகளை அமைத்து ஜனாதிபதி தேர்தலுக்கான அடுத்த கட்ட பிரதான நகர்வுகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி குறித்தும் தமிழர் தரப்பின் ஆதரவை நோக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.