தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவேன்

779 0

palithaமீகஹாதென்ன ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்காக 10 குழந்தைகளை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த விலகுவதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தைகளை இணைத்து கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு இன்றுடன் மூன்று நாட்களாகும். இந்நிலையில் இன்று குறித்த அலுவலகத்தின் நுழைவு பாதையில்மதுகம மத்திய மாவத்தையை இடைமறித்து டயர்கள் எரிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களாக குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவித்து பிரதி அமைச்சர் நேற்று முன்தினம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அதில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a comment