வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 45 அடி உயரம் கொண்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் சிறப்பாக இடம்பெற்றது.
தொன்மையும் அற்புதங்களும் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்றுவருகிறது. நாளை மறுதினம் தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் 29 வருடங்களின் பின்னர் புதிய சித்திரத் தேர் வடிவமைக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
முன்பிருந்த முக உத்தரத் தேரை விடவும் பெரியதாகவும் 45 அடி உயரம் கொண்டதும், சிறப்பான சிற்ப வடிவமைப்புக்களையும் கொண்டதாக இந்த தேர் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மிக்க பஞ்சரதங்களின் நடுநாயகமாக விளங்கும் சண்முகப் பெருமானின் முக உத்தர திருத்தேர் 1990ஆம் ஆண்டுளில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது அழிவடைந்திருந்தது.
மேலும் இதன்போது, ஏனைய நான்கு தேர்கள், சப்பை இரதம், திருமஞ்ச இரதம், கைலாய வாகனம் என்பவையும் முற்றுமுழுதாக அழிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.