புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்

424 0

cograssஇலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களின்  உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் உத்தேச அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செய்யப்பட்ட சோல்பரி யாப்பில், சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்காக  29 டி பிரிவு இருந்தது போன்று  புதிய அரசியல் யாப்பிலும் சில சிறப்பு விதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ். சுபைர்தீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த  2012 ஆம் ஆண்டு சனத் தொகைக்கு ஏற்ப உள்ளுராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், நாடாளுமன்றம்  என்பவற்றிலும் உரிய  பிரதிநிதித்துவம் கிடைக்க  வேண்டும்.

2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டிற்கு அமைய இலங்கைத்தமிழர், முஸ்லீம்கள், மலையாகத் தமிழர்களுக்கு  சிறப்புத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் .

தனித்தொகுதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்த முடியாத  ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மொத்த அங்கத்தவர் தொகையில் மூன்றில் ஒரு பங்கு சிறுபான்மையின பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.

குறித்த விடயத்தில் ஏனைய சிறுபான்மையின அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும்,  அரசாங்கத்திற்கு  அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.