முஸ்லிம் திருமண சட்டத்தை உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண் ஆர்வாலளர்கள் சிலர் கொழும்பில் இன்று (26) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.
40 வருடங்களாக முஸ்லிம் திருமண சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என பேசப்பட்டாலும் எதாவது ஒரு காரணத்தினால் அது தடைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் கஷ்டப்படும் விதமான எந்தவொரு சட்டமும் கடவுளினால் படைக்கப்படவில்லை எனவும் மனிதர்களினால் அவை பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு பெண்களை துன்புறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.