சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் கைது

337 0

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலபிட்டிய, கொரகஒய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சஹ்ரானின் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.