கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

361 0

கல்கிஸை – புனித ரீட்டா பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் கஸ்கிஸை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 18 கிலோ 552 கிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த  24 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.