தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள ஊழல் தடுப்பு குழு செயலகத்தை தொடர்ந்து பராமரிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதனுடன் தொடர்புடைய ஆவணம் நேற்று கூடிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
தீவர மோசடி தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் அது தொடர்பான விசாரணைகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இந்த செயலகம் அமைச்சரவையின் தீர்மானத்தின் கீழ் கடந்த வருடம் நிறுவப்பட்டது. அதன் அதிகாரபூர்வ கால எல்லை நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.