மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவுக்குழுவில் ஆஜர்

375 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (26) காலை மீண்டும் ஒன்று கூடியுள்ளது.

இன்றைய விசாரணையைன் போது சாட்சியம் வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டொக்டர் இந்திரஜித் குமாரசாமி, தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

அதேவேளை இன்று சட்டமா அதிபரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தனது சாட்சியங்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது