குளியாபிட்டிய பொலிஸ் பிரிவில் அபலதெனிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது வேனில் வந்த ஒரு குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று (25) இரவு 8.10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் அபலதெனிய, கொமுகொமுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதான சமன் சந்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய குளியாபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.