2 ஆம் தவனை பரீட்சைக்காக மத்திய மாகாணத்தில் இருந்து அச்சிடபட்டு அனுப்பபட்ட பரீட்சை வினாத் தாள்கள் பேயாலோன் தமிழ் வித்தியாளயத்தின் அதிபரின் காரியாலயத்தில் இருந்தது.
வினாத் தாள்கள் பொதி செய்யபட்டு வைத்திருந்த பொதி, உடைக்கபட்டு இருந்ததை அவதானித்த அதிபர், சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை நேற்று செய்துள்ளார்.
முறைப்பாட்டிற்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த பாடசாலையின் க.பொ.சா. தரத்தில் கல்விபயிலும் 2 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
பாடசாலையின் அதிபரின் காரியாலயத்தின் பின்புறத்தில் உள்ள 3 ஜன்னல்களும் திறந்து இருந்ததாகவும் ஜன்னல் வழியாக சென்று குறித்த காரியாலயத்தில் பொதி செய்யபட்டு வைக்கபட்டிருந்த விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான வினாத் தாள்களை குறித்த 2 மாணவர்களும் களவாடியதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யபட்ட 16 வயதுடைய 2 மாணவர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று (26) முன்னிலைபடுத்தபடவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.