தேரர்கள் தொடர்பான ரஞ்சனின் விமர்சனங்களை விசாரிக்க மூவர் அடங்கிய குழு

401 0

தேரர்கள் தொடர்பில் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த விமர்சனங்களை விசாரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

கடந்த வாரம் தேரர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்  ரஞ்சன் ராமநாயக்க சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளிகள் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அத்துடன் அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளாகவும் காணப்பட்டன. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பின் உறுப்பினர்களும்  தமது  அதிருப்தியினையே  வெளிப்படுத்தினார்கள்.

முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் உண்மைத்தன்மை  பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பல்வேறு   தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டன. இதற்கமைய   இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க   வெளிவிவகார அமைச்சர் தலைமையில்  மூவர் அடங்கிய  குழுவினை இன்று நியமித்தார்.

அமைச்சர்களான ரஞ்சித் மத்துவ  பண்டார, மலிக்  சமரவிக்ரம ஆகியோர் இக் குழுவின்  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.