மேற்படி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் “பெப்கொட்” பாரதூக்கி,  பெக்கோ இயந்திரம் காணாமல் போனமை குறித்தே இவ்விருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

காணாமல் போயுள்ள இயந்திரம் இருபது இலட்ச ரூபா பெறுமதிமிக்கதாகுமென பொலிசார் தெரிவித்தனர்.

மொனராகலைப் பகுதியின் ஒக்கம்பிட்டிய பகுதியின் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றிற்கு மேற்குறிப்பிட்ட இயந்திரத்தை கொண்டு சென்ற வேளையில் அந்த இயந்திரம் காணாமல் போயிருப்பதாக தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது குறித்து வெள்ளவாய பொலிசார் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இயந்திரத்தை தேடியும் வருகின்றனர். மேற்படி காணாமல் போயுள்ள பெகோ இயந்திரம் கைது செய்யப்பட்ட இருவர் பொறுப்பிலேயே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.