நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
2016ஆம் ஆண்டில் 1941.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 2017ம் ஆண்டு 1819.5 பில்லியன் ரூபா எனத் தெரியவந்துள்ளது.
மேலும் 2016ம் ஆண்டு 2.3 பில்லியன் ரூபாவாக உத்தேசிக்கப்பட்ட ஜனாதிபதிக்கான செலவீனம், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
அதேபோன்று 2016ம் ஆண்டு 0.4 பில்லியன் ரூபாவாக ,ருந்த பிரதமரின் செலவீனம், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, 1.25 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
மேலும், 2017ம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, பாதுகாப்பு அமைச்சுக்காக 284 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்காக 160.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சுக்காக 76.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ,து 185.9 பில்லியன் ஆகும்.
இதற்கமையவே ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.