பிரித்தானிய பிரதிநிதித்துவம் அற்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இரண்டாம் நாளாகவும் பிரசல்ஸில் கூடி தற்போதைய நிலைமையை ஆராய்கின்றார்கள்.நேற்று இடம்பெற்ற அமர்வின்போது அதில் பங்கேற்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இணைந்திருக்கும் 27 நாடுகளுடன் தொடர்ந்தும் உறவுகள் பேணப்படும் என தெரிவித்தார்.இதன்போது கருத்துரைத்த ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேக்கல், பிரித்தானியாவின் வாக்குகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.எனினும் அவரும் ஏனைய தலைவர்களும் பிரித்தானியா மிக விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிச்செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், பிரசல்ஸ் மாநாடு, டேவிட் கெமரூனை பொருத்தவரையில் நேற்று இறுதி மாநாடாக அமைந்திருந்தது.இதன்போது கருத்துரைத்த டேவிட் கெமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பின்னரும் அந்த ஒன்றியத்தின் நாடுகளுடன் நெருங்கிய உறவு அவசியம் என கோரிக்கை விடுத்தார்.அதேநேரம், குடிவரவு சட்டங்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.