வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலை மறுப்பு!

292 0

அரசாங்கம் 16000  பட்டதாரிகளுக்கு  வேலைவாய்ப்பக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கையை  ஆகஸ்ட் மாதம்  முதலாம்  திகதி மேற்கொள்ளவுள்ளது.அதில் வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும்  உள்வாங்கப்படவில்லை என்று  வெளிவாரி  பட்டத்தை பாதுகாக்கும்  அமைப்புக்களின்  ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வெளிவாரி  பாட்டதாரிகளை  உள்வாங்காமை  தொடர்பில்   ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேனவும் , பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவும்  கவனம் செலுத்தி  உரிய  தீர்வை  பெற்றுத்தர  வேண்டும் .

பட்டதாரிகளை  உள்வாரி பட்டதாரிகள்  வெளிவாரி  பட்டதாரிகள் என  வேறுபடுத்தாது  அனைத்து  வேலையில்லா  பட்டதாரிகளுக்கும்  வேலை  வாய்ப்புக்களை  வழங்குவதற்கான  நடவடிக்கைகளை  உடனடியாக  மேற்கொள்ள  வேண்டும்  எனவும்  ஒன்றியம்  கோரிக்கை  விடுத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.