விண்வெளியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இஸ்ரோவுக்கு, அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ வாழ்த்து தெரிவித்துள்ளது.
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
விண்வெளியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இஸ்ரோவுக்கு, அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ வாழ்த்து தெரிவித்துள்ளது. “நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆய்வு பணியை அறிய நாங்களும் ஆர்வமாக உள்ளோம்’ என ‘நாசா’ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.