கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல் என்னும் தலைப்பில் இன்று நடைபெற்ற செயலமர்வில் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி சபைகளான மாநகர சபை, பிரதேச சபை, மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய செயலமர்வில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் என்ற தலைப்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் சிஹாஜினி விஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில, பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் சத்திசீலன், மாவட்ட உதவி செயலாளர் பிருந்தாகரண் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மேல்மாகான உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் தர்மசிறி நாணயக்கார, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர்சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.