புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றாமனூர் பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நேற்று சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 04 மணியளவில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது ராமகிருஷ்ன்ன ராம்ராஜ் என்பவரின் வீட்டு கிணற்றில் இருந்து யுத்த உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்ற கட்டளையின் படி புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள.
சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.