அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசுடமையாக்கப்படும்-ராஜித

290 0
அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசாங்கம் கையகப்படுத்தி அதன் நிர்வாகம் மாகாண சபைக்கு வழங்கப்படும் என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

வைத்தியசாலைக்கான நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற மாகாண சுகாதார அமைச்சர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் கையகப்படுத்துவது சம்பந்தமாக அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறந்த தோட்ட வைத்தியசாலைக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட உள்ளதாகவும், பகுதி பகுதியாகவே அரசாங்கம் கையகப்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.