தலைவர்கள் வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

416 0

அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுப்­பதும் எமது நிலையை உல­க­றியச் செய்து எமது நாட்டின் தலை­வர்­களை வெட்கித் தலை­கு­னிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்­ப­டுத்­து­வ­துமே எமது குறிக்­கோ­ளாக இரு க்க வேண்டும். அத்­துடன் கட்சி சார் செயற்­பா­டு­க­ளிலும், தமிழ்த் தேசி­யத்தைப் பலப்­ப­டுத்தும் பணி­யிலும் கொள்கை ஒரு­மைப்­பாடு கொண்ட அனை­வ­ரையும் எம்­மோடு பய­ணிக்க அன்­பு­ரி­மை­யுடன் அழைத்து நிற்­கின்றேன்.

தன்­னாட்சி – தற்­சார்பு – தன்­னி­றைவே எமது தாரக மந்­தி­ரங்கள் என்று தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லா­ளரும் முன்னாள் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் மட்­டக்­க­ளப்பு மாவட்டப் பணி­மனைத் திறப்பு விழா நேற்று மாமாங்கம் சோம­சுந்­தரம் சதுக்­கத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு பணி­ம­னை­யினை திறந்­து­வைத்­த­ பின்னர் உரை­யாற்­று­கை­யி­லேயே விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

மட்­டக்­க­ளப்பில் தமிழ் மக்கள் கூட்­ட­ணி க்கு மக்கள் தொடர்பு பணி­மனை ஒன்றை உரு­வாக்க உத­விய சக­ல­ருக்கும் முதற்கண் என்­னு­டைய நன்­றி­ய­றி­தல்கள் உரித்­தா­குக. இது சம்­பந்­த­மாக எமது நிர்­வா­கத்­திற்குப் பொறுப்­பான இணை உப­செ­ய­லாளர் சோம­சுந்­தரம் எடுத்­துக்­கொண்ட முயற்­சிகள் பாராட்­டப்­பட வேண்­டி­யவை. மாமாங்கப் பிள்­ளை­யாரின் கொடி ஏறி­மு­டிய எமது கொடியும் ஏற்­றப்­பட்­டுள்­ளது.

அதா­வது, எமது பணி­மனை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்நாள் தொடக்கம் தேவைகள் இருக்கும் எம்மக்­களும் எம்­முடன் சேர்ந்து அர­சி­யலில் பய­ணிக்க விரும்பும் எம் மக்­களும் இங்­கு­வந்து எமது செயற்­குழு அங்­கத்­த­வர்­களைச் சந்­தித்துச் செல்­லலாம். அவர்­க­ளுக்கு எம்­மா­லான உத­வி­களை நாம் புரிய கட­மைப்­பட்­டுள்ளோம்.

நிதி நெருக்­க­டிகள் இருந்­தாலும் அவற்றை சமா­ளிக்கக்கூடி­ய­வர்கள் எமது கட்சி உறுப்­பி­னர்கள். எமது உரி­மை­களை மீட்­டெ­டுப்­ப­தற்­காகப் பல தசாப்­தங்­க­ளாக நாம் போராடி வரு­கின்றோம். சொல்­லொண்ணாத் துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் தாங்கி மாபெரும் இன­வ­ழிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யாக இன நீதி மறுக்­கப்­பட்டு சொந்த மண்­ணி­லேயே அடி­மை­க­ளாக வாழ்ந்து வரு­கின்ற துயர் நிலையைக் கொண்­ட­வர்­க­ளாக நாம் வாழ்ந்து வரு­கின்றோம்.

ஆரம்ப காலங்­களில் முஸ்லிம் சகோ­த­ரர்கள் எம்­முடன் இணைந்தே போரா­டி­னார்கள். என்­னுடன் சட்டக் கல்­வி­பெற்ற அக்­கால சட்­ட­மா­ண­வ­ரான காலஞ்­சென்ற மஷூர் மௌலானா ஒரு காலத்தில் தந்தை செல்­வாவின் வலது கர­மாக திகழ்ந்தார். நண்பர் அஷ்ரப்கூட தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் சேர்ந்தே தமது அர­சியல் பணியை ஆரம்­பித்தார். இன்று எம்­மி­டை­யே­யான ஒற்­றுமை, புரிந்­து­ணர்வு யாவும் தேய்ந்து வரு­கின்­றதை காண்­கின்றேன். சுய­நலம் எம்மை பிள­வு­ப­டுத்­தி­யுள்­ளதைக் காண்­கின்றேன்.

மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலான தமி­ழர்­களின் ஆயுதம் தழு­விய உரிமை மீட்புப் போராட்டம் 2009 மே மாதத்­தோடு மௌனி க்­கப்­பட்டு இவ்­வாண்­டோடு பத்­தாண்­டு கள் நிறை­வு­பெ­று­கின்­றன. இந்­நி­லை­யி லும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழி­வுகள் முன்­வைக்­கப்­ப­டா­மலும், இனப்­ப­டு­கொ­லைக்­கான நீதி, போர்க்­குற்ற விசா­ரணை, வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்­கான நீதி,  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை, இரா­ணு­வத்தின் பிடியிலுள்ள காணிகள் விடு­விப்பு, போர் முடிந்து இரா­ணு­வத்­தினர் வெளி­யே­றுதல் போன்ற பல விட­யங்­களில் ஆட்சி அதி­கா­ரத்தில் உள்­ள­வர்கள் சற்­றேனும் கவனம் செலுத்­து­வ­தாகத் தெரி­ய­வில்லை.

தனிப்­பட்ட நன்­மைகள்

எம்­ம­வரும் அது­பற்றி அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுக்க வேண்டும் என்ற மனோ நிலையில் இல்லை. தமது தனிப்­பட்ட நன்­மை­க­ளையே தமது பத­வி­களை வைத்து பெற்­று­வர எத்­த­னித்­துள்­ளார்கள்.

இதன் விளை­வா­கவே கொள்­கையில் உறு­தி­யோடு, இன விடு­த­லையை முதன்­மைப்­ப­டுத்தி, நீதியின் வழி நின்று செய­லாற்ற தமிழ் மக்கள் கூட்­டணி என்­கின்ற கட்­சியை நிறுவ வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மா­கிற்று. உங்கள் அனை­வ­ரதும் அய­ராத உழைப்பும், ஒத்­து­ழைப்பும், பொறு­மை­யுமே எமது கட்­சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வல்­லன.

மதிப்­புக்­கு­ரிய மட்­டக்­க­ளப்பு வாழ் மக்­களே, வட கிழக்கு மாகாண தமிழ் மக்­களின்  உரி­மை­களை வென்­ற­டுப்­ப­தற்­கான தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக ரீதி­யான செயற்­பா­டு­களில் மட்­டக்­க­ளப்பு மக்கள் முழு­மை­யான அளவில் பங்­கு­பற்றி எம்மை பலப்­ப­டுத்­து­வார்கள் என்று நான் நம்­பு­கிறேன். எமது மக்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை திட்­ட­மி­டப்­பட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் பீனிக்ஸ் பறவை போல புத்­து­யிர்­பெற்று இன்­றைய தமிழ் மக்­களின் அர­சியல் போராட்­டத்தின் முது­கெ­லும்­பாக எம் மக்கள் செயற்­பட்டு வரு­வதைக்கண்டு நான் வியப்­ப­டைந்­துள்ளேன்.

போராட்­டங்கள் வீண்­போ­காது

பல வரு­டங்­க­ளாக வீதி­களில் நின்று எம் மக்கள் பற்­று­று­தி­யுடன் மேற்­கொண்­டு­வரும் பல்­வேறு போராட்­டங்­களைக் கண்­டு­கொண்­டுதான் இருக்­கின்றேன். அத்­துடன் கண்டு நான் உள்­ளக்­கி­ளர்ச்சி அடைந்­தி­ருக்­கின்றேன். உதா­ர­ணத்­திற்கு திரு­கோ­ண­ம­லையில் ஆளுநர் மாளி­கைக்கு முன்­பாக இன்றும் காணா­மற்­போ­னோரின் உற­வி­னர்கள் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். உங்கள் போராட்­டங்கள் ஒரு­போதும் வீண் போகாது. உங்கள் போராட்­டங்­க­ளுக்­கான எம்­மா­லான உத­வி­களை வழங்கும் வகை­யிலும் உரி­மை­களை வென்­ற­டுப்­ப­தற்­கான எமது செயற்­பா­டு­க­ளுக்கு உங்­களின் உத­விகள் மற்றும் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ளும் வகை­யி­லுமே இன்று இந்தப் பணி­மனை திறந்­து­வைக்­கப்­ப­டு­கி­றது.

பல கஷ்­டங்கள் மத்­தியில் இந்தப் பணி­ம­னையை திறந்­து­வைத்து எதிர்­கா­லத்தில் சிறந்த முறையில் மக்கள் சேவை ஆற்­று­வ­தற்­கான பல்­வேறு திட்­டங்­களை எம்­ம­வர்கள் வகுத்­தி­ருக்­கின்­றார்கள்.

மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்கள் எமது இந்தப் பணி­ம­னை­யுடன் இணைந்து எமது மக்­களின் அர­சியல், சமூக, பொரு­ளா­தார மற்றும் கலா­சார ரீதி­யான அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வார்கள் என்று நான் எதிர்­பார்க்­கின்றேன்.  அத்­துடன் இந்­நி­கழ்­விலும், கட்சி சார் செயற்­பா­டு­க­ளிலும், தமிழ்த் தேசி­யத்தைப் பலப்­ப­டுத்தும் பணி­யிலும் எம்­மோடு பய­ணிக்க அனை­வ­ரையும் அன்­பு­ரி­மை­யுடன் அழைத்து நிற்­கின்றேன்.

ஐ.நா. மனித உரி­மைகள் சபையின் தீர்­மா­னத்­தினை நிறை­வேற்­றாமல் பல்­வேறு ஏமாற்று வழி­மு­றை­களை இலங்கை அர­சாங்கம் கையாண்டு ஏமாற்­றி­வந்த நிலை யில் அவற்­றுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக உண்மை நிலை­மை­களை எடுத்­துக்­கூறி எம்மக்கள் நேர்­கொண்ட போராட்­டங்­களும் அர­சியல் செயற்­பா­டு­க­ளுமே  ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் சில சாத­க­மான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன.

இலங்­கையில் என்ன நடை­பெற்­று­வ­ரு­கின்­றன, உண்மை நிலைமை என்ன, மக்­களின் உணர்­வுகள் என்ன என்­பவை பற்றி எல்லாம் சர்­வ­தேச சமூ­கத்­துக்கு எட்­டி­யி­ருக்­கின்­றது என்­ப­தையே மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

ஐ.நா.வின் கோரிக்கை

அதா­வது, போர்­க்குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் நம்­ப­கத்­தன்­மை­யான உள்­ளக விசா­ரணை நடை­பெ­ற­வில்லை என்­பதால் போர்க்­குற்றம் மற்றும் ஏனைய குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்­களை விசா­ரணை செய்து வழக்கு தொடரும் நட­வ­டிக்­கை­களை உறுப்பு நாடுகள் மேற்­கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரி­மை­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையில் உறுப்பு நாடு­க­ளுக்கு பரிந்­து­ரைத்­தி­ருக்­கின்­றது.

சித்­தி­ர­வதை, வலிந்து காணாமல் செய்­யப்­ப­டுதல், போர்­க்குற்­றங்கள் அல்­லது மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் ஆகி­ய­வற்றை குறிப்­பாக சர்­வ­தேச நியா­யா­திக்க கோட்­பா­டு­க­ளுக்கு அமை­வாக விசா­ரணை செய்து வழக்கு தொடர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், இலங்­கையில் மனித உரி­மை­களை கண்­கா­ணிப்­ப­தற்கும், ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர், மனித உரி­மைகள் சபை, மற்றும் ஏனைய மனித உரி­மைகள் பொறி­மு­றைகள் ஆகி­ய­வற்றின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்றும் பொருட்டும் ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் அலு­வ­லகம் ஒன்றை அமைப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்­துக்கு அழைப்பு விடுக்­க­வேண்டும் என்றும் பரிந்­து­ரைத்­துள்­ளது.

எமது தீர்­மானம்

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேர­வையில் ஒரு தீர்­மா­னத்­தினைக் கொண்­டு­வந்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் உட்­பட சம்­பந்­தப்­பட்ட பல தரப்­புக்­க­ளுக்கும் நாம் அனுப்­பிய தீர்­மா­னத்தில் இந்த விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யி­ருந்தோம். இவை கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றமை மகிழ்ச்சி அளிக்­கின்­றது. அவர்­களின் இந்தப் பரிந்­து­ரை­களை நாம் வர­வேற்­கின்றோம். அதே­வேளை, இலங்கை விட­யத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­ல­வேண்டும் என்றும் நாம் எமது தீர்­மா­னத்தில் வலி­யு­றுத்தி இருக்­கின்றோம்.

அண்­மையில் அமெ­ரிக்க அர­சாங்க அலு­வ­லர்கள் என்னை சந்­திக்க வந்­த­போதும் நான் இதை வலி­யு­றுத்­தினேன்.  ஐ.நா மனித உரி­மைகள் சபையின் தீர்­மா­னத்­தினை இலங்கை நிறை­வேற்­று­வ­தற்கு தவறி இருக்கும் நிலையில் இந்த விட­யத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழுவும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபை விசேட பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனப் பல தமிழ்க் கட்சிகள்  கூட்டாக வலி யுறுத்தியுள்ளன. ஆகவே எமது இந்த வலியு றுத்தல்கள் நடைமுறைக்கு வரும் வகை யில் இங்குள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் தமது அரசியல், ராஜ தந்திர செயற்பாடுகளை வகுத்து செயற் படவேண்டும்.

அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்ப தும் எமது நிலையை உலகறியச் செய்து எமது நாட்டின் தலைவர்களை வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்படுத்துவதுமே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அத்துடன் கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணி யிலும் கொள்கை ஒருமைப்பாடு கொண்ட அனைவரையும் எம்மோடு பயணிக்க அன் புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன். தன் னாட்சி – தற்சார்பு – தன்னிறைவே எமது தாரக மந்திரங்கள் என்றார்.