கர்­தினால் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளவை மக்களின் மனங்களின் இருக்கும் விடயங்களையே!

333 0

நாட்டு மக்­களின் மனதில் இருக்­கின்ற விட­யங்­க­ளையே கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.தற்போ­தைய  ஆட்சி தொடர்பில்  நம்­பிக்­கை­யற்ற தன்மை அனைவர் மத்­தி­யிலும் ஏற்­பட்­டுள்­ள­மை­யினை கர்­தினால்  சிறப்­பாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் என்று  கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்றக் குழுத்­த­லை­வரும் எம்.பி.யுமான தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். 

புதிய அர­சாங்கம் ஒன்றை மக்கள் தெரிவு செய்­வ­தற்கு  சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வ­தற்கு  அதி­கா­ரத்தில் இருக்­கின்ற  தரப்பு முன்­வ­ர­வேண்டும் என்றும்   தினேஷ் குண­வர்த்த குறிப்­பிட்டார்.  அர­சாங்­கத்தை கடு­மை­யாக   விமர்­சித்து   கொழும்பு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை  தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் இதனைக்  கூறினார்.

இது தொடர்பில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போ­தைய நிலைமை தொடர்­பா­கவும் நெருக்­கடி நிலை குறித்தும் ஆழ­மாக சிந்­தித்தே   கர்­தினால்  மக்­க­ளுக்கு ஒரு செய்­தியை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அதனை ஆழ­மான முறையில் கவ­னிக்­க­வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும். உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்று  மூன்று மாதங்கள் கடந்­து­விட்­டன. ஆனால் இது­வ­ரையில் எந்­த­வொரு நட­வ­டிக்­கையும்   சரி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

கைதுகள் இடம்­பெற்­றுள்­ளன. எனினும் இன்னும் கைதுகள் தொடர்ந்­து­கொண்டே இருக்­கின்­றன.   இதன்­மூலம்  சரி­யா­ன­தொரு நட­வ­டிக்கை   எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது  தெ ளிவா­கின்­றது. மக்­களின் பாது­காப்பு மற்றும்  தேசிய பாது­காப்பு குறித்து அதி­கா­ரத்தில் இருக்­கின்­ற­வர்கள்  கவனம் செலுத்­த­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது. இவ்­வாறு மக்­க­ளுக்­கான தேவையை நிறை­வேற்ற முடி­யா­விடின் வீட்­டுக்கு செல்­லு­மாறே கர்­தினால் கூறி­யி­ருக்­கின்றார்.

இதன்­மூலம்  மக்­களின்  மனதில் இருக்­கின்ற பொது­வான விட­யத்தை   பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். இன்று நாடு பொரு­ளா­தார ரீதி­யிலும் அர­சியல் ரீதி­யிலும் பாரிய நெருக்­க­டியில்  சிக்­கி­யி­ருக்­கி­றது. மக்கள் நம்­பிக்­கை­யற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.  எனவே  இந்த நிலைமை  நீடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதனால் விரைவாக  மக்களுக்கு புதிய ஆட்சியை அமைப்பதற்கான சந்தர்ப்பம்  ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்.  அதனூடாக புதிய  அரசாங்கமொன்றை மக்கள் தெரிவுசெய்வார்கள்  என்றார்.