சென்னை ஐ.ஐ.டி.யின் புத்தாக்க மைய மாணவர்கள் இணைந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் ‘அக்ரிகாப்டர்’ என்ற பெயரில் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
வயல்வெளிகளில் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளே நேரடியாக தெளிப்பதால் அந்த மருந்தின் நச்சுத்தன்மையால் விவசாயிகளுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே இதை தடுக்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி.யின் புத்தாக்க மைய மாணவர்கள் இணைந்து ‘அக்ரிகாப்டர்’ என்ற பெயரில் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இந்த விமானம் 15 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்தை சுமந்து சென்று பயிர்களுக்கு தெளிக்கும் திறன் பெற்றதாகும். அத்துடன் மீண்டும் தானாகவே பூச்சிக்கொல்லி மருந்தை நிரப்பிக்கொள்ளும் இந்த விமானம் மனிதர்களை விட 10 மடங்கு வேகமாகவும், 100 மடங்கு துல்லியமாகவும் மருந்தை தெளிக்கும்.
பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பது மட்டுமின்றி, பயிர்களின் ஆரோக்கியத்தையும் இந்த விமானம் துல்லியமாக கண்டுபிடிக்கும். இதற்காக விமானத்தில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த அக்ரிகாப்டர் உருவாக்குவதற்கு சுமார் ரூ.5 லட்சம் தேவைப்பட்டதாக ஐ.ஐ.டி. மாணவர்கள் தெரிவித்தனர்.