தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி பெயரளவில் வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கி பாரிய துரோகமிழைத்துள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியிலே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு , மலையக மக்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.
வடக்கு மக்களின் அடிப்படை தேவைகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. அபிவிருத்தி தொடர்பில் அழுத்தம் கொடுத்தால் அரசியல் தீர்வின் மீதான கவனம் மறைக்கப்படும் என்று கூட்டமைப்பு குறிப்பிடுகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகளினால் வடக்கு தமிழ் மக்களுக்கே அரசாங்கத்தினால் எதுவும் கிடையாது போகும். அரசியல் தீர்வு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது.
எனவே இனியாவது தமிழ் மக்கள் தொடர்ந்து அரசாங்கத்திற்கு மாத்திரம் ஆதரவாக செயற்படும் தமது பிரதிநிதிகளின் பக்கம் செல்லாமல் அரசியல் ரீதியில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.