ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்-கேப்பாப்புலவு மக்கள்

475 0

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, 21.07.2019 இன்றையநாள் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் குறித்த குழுவினால் கேட்டறியப்பட்டன.கலந்துரையாடல் தொடர்பில் கேப்பாப்புலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.