இலங்கையர்களை இலக்கு வைத்து, பேஸ்புக் ஊடாக நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிதி மோசடி தொடர்பில், கணினி அவசர நடவடிக்கைப் பிரிவுக்கு முறைபாடு கிடைத்துள்ளதாக, இதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் இருக்கும் குறித்த பக்கத்தை லைக் செய்தவுடன் ஒரு இலட்சம் ரூபாய் கடன் கிடைத்துள்ளதுடன், 25,000 ரூபாய் வைப்பிலிட வேண்டும் என்றும் தகவல்கள் வருவதாகவும் இதன் மூலமே மோசடி இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Flash cash loan.lk என்ற பெயரிலுள்ள பேஸ்புக் கணக்கிலேயே இவ்வாறான நிதி மோசடி இடம்பெறுவதாகவும், இந்த மோசடி தொடர்பில், கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.