எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுகிறது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். அனைத்து நாடுகளுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களும் ஒரு வாரத்துக்கு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக விமான நிறுவனம்வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
விமான சேவையை சீர்குலைக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எகிப்தில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரிட்டன் வெளியுற்வுத்துறை தெரிவித்துள்ளது.