யாழ்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் அணி’ இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வாள்வெட்டு, குழுச்சண்டை ஆகிய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், குற்றவாளிகளைக் கண்டறிவதற்கும் ஆயுதம் தாங்கிய ‘பொலிஸார் மோட்டார் சைக்கிள் அணி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உப பொலிஸ் பரிசோதகர் சிறீகஜன் தலைமையில் சுமார் 10ற்கும் மேற்பட்ட பொலிஸார் செயற்படவுள்ள குறித்த மோட்டார் சைக்கிள் அணியானது 24 மணி நேரமும் கடமையில் ஈடுபடவுள்ளதோடு வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மோட்டார் சைக்கிள் அணிக்கு பொது மக்கள் தமது ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் யாழ்குடாநாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு மற்றும் குழுச்சண்டை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தமுடியும் என யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்கள் குற்றச்செயல் நடைபெறுவது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கும் பட்சத்தில் மோட்டார் சைக்கிள் அணியானது சம்பவ இடத்திற்கு வருகை தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.