துருக்கி தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கண்டனம்

465 0

istanbulஅப்பாவிப் பொதுமக்கள் 41 பேர்கள் பலியாகவும் மேலும் பலர் காயமடையவும் காரணமாக அமைந்த துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகரின் அதாதுர்க் சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சாதாரண பொது மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக கூட்டாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை தாம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி நாட்டின் ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கோழைத்தனமான மிலேச்சப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் துருக்கி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தமது ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் தாம் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment