ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்படுவதாகவும் அவர்களின் பெயர்கள் அனைத்தும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருவர் மோதிக் கொள்வதாகவும் இது குறித்து தங்களின் நிலைப்பாடு என்னவெனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, பாட்டளி சம்பிக்க ரணவக்க, தயா கமகே மற்றும் கரு ஜயசூரிய ஆகிய ஐந்து பேரின் பெயர்கள் இதற்காக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.