கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை இருந்துள்ளன.
இப் பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது.
அதேநேரத்தில் இப்பிரதேசத்தில் போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டுள்ள நிலையில், கினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதி பாதுகாப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
பிரதேசத்தில் பொது மக்கள் இயற்கை சீர்கேட்டின் காரணமாக பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
கினிகத்தேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இப்பிரதேசத்தில் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.